உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டவுன் பஞ்சாயத்துடன் 4 கிராம பஞ்., இணைப்புஎதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்

டவுன் பஞ்சாயத்துடன் 4 கிராம பஞ்., இணைப்புஎதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்

டவுன் பஞ்சாயத்துடன் 4 கிராம பஞ்., இணைப்புஎதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்நாமக்கல்,: மோகனுார் டவுன் பஞ்சாயத்துடன், நான்கு கிராம பஞ்சாயத்துகளை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், மோகனுார் டவுன் பஞ்சாயத்து மற்றும் குமரிபாளையம், பேட்டப்பாளையம், ராசிபாளையம், மணப்பள்ளி என, 4 கிராம பஞ்சாயத்துகள் அருகருகே அமைந்துள்ளன.இந்த உள்ளாட்சி அமைப்புகளில், குடியிருப்புகளின் எண்ணிக்கை, குறைவான விளைநிலங்கள், நகர்ப்புற தன்மைக்கான காரணிகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, மோகனுார் டவுன் பஞ்., மற்றும் நான்கு கிராம பஞ்சாயத்துகளை இணைத்து, மோகனுார் நகராட்சியாக அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நான்கு கிராம பஞ்., மக்கள், மோகனுார் டவுன் பஞ்., கலையரங்கில், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி ராமதாஸ், ராசிபாளையம் பஞ்., முன்னாள் தலைவர் சுப்பிரமணி, வார்டு உறுப்பினர் ஆரோன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தகவலறிந்து வந்த மோகனுார் தாசில்தார் மணிகண்டன், பி.டி.ஓ., கீதா, இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'நகராட்சியாக தரம் உயர்த்தும்போது, சொத்து வரி, குடிநீர் கட்டணம், வீட்டுவரி உள்ளிட்டவை அதிகரிக்கும். 100 நாள் வேலை பாதிக்கப்படும். இதில் பணியாற்றுபவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். அதனால், கிராம பஞ்சாயத்தாகவே நீடிக்க அனுமதிக்க வேண்டும்' என தெரிவித்தனர்.அதற்கு அதிகாரிகள், 'உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதிக்கொடுங்கள். அரசுக்கு முறைப்படி அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ