டிரைவருக்கு அரிவாள் வெட்டு 4 பேர் கைது; ஒருவருக்கு வலை
டிரைவருக்கு அரிவாள் வெட்டு 4 பேர் கைது; ஒருவருக்கு 'வலை'திருச்செங்கோடு:திருச்செங்கோடு, நெசவாளர் காலனி, சாந்தி வனம் சுடுகாட்டில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பவர் ரஞ்சித்குமார், 29; இவரது அத்தை மகன் சிலம்பரசனுக்கும் மற்றும் சிலருக்கும், கடந்த, 13 இரவு நெசவாளர் காலனி மாரியம்மன் பண்டிகையின் போது மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, 14 மதியம், 3:00 மணிக்கு நெசவாளர் காலனி பகுதியில், ரஞ்சித்குமார் சிலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திதாசன், 27, சண்முகபுரம் ஜம்பு குட்டையை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி மோகன்ராஜ், 27, மலைசுத்தி ரோடு எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ரிக் டிரைவர் சக்கரவர்த்தி, 27, ஆட்டோ டிரைவர் அஜய்குமார், 27, இந்துராஜ், 27, ஆகியோர் சேர்ந்து, ரஞ்சித்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த ரஞ்சித்குமார், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, சக்திதாசன், மோகன்ராஜ், சக்கரவர்த்தி, அஜய்குமார் ஆகிய நால்வரையும், திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, இந்துராஜை தேடி வருகின்றனர்.