உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரி டிரைவர் உயிரிழப்பு ரூ.3 லட்சம் நிவாரணம்

லாரி டிரைவர் உயிரிழப்பு ரூ.3 லட்சம் நிவாரணம்

நாமக்கல்: கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மற்றொரு லாரி டிரைவரின் குடும்பத்தினருக்கு, நேற்று, கலெக்டர் உமா, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். புதுச்சத்திரம் யூனியன், பாப்பிநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்-தவர் சரவணன்; லாரி டிரைவர். கடந்த, 16ல், கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், சிரூரு என்ற பகுதிக்கு லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது அங்கு ஏற்பட்ட நிலச்ச-ரிவின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, லாரியை தண்ணீர் அடித்து சென்றது. இதில் சிக்கி சரவணன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதி, 3 லட்சம் ரூபாயை வழங்க தமிழக அரசு அறிவித்து. அதற்கான காசோ-லையை, நேற்று சரவணனின் குடும்பத்தாரிடம் வழங்கிய கலெக்டர் உமா, ஆறுதல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை