உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நுாதன முறையில் மினி ஆட்டோ திருட்டு

நுாதன முறையில் மினி ஆட்டோ திருட்டு

ப.வேலுார்: --சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்த வீரபுத்திரன் மகன் ராமச்-சந்திரன், 30; பூச்செடி வியாபாரி. இவர், நேற்று முன்தினம், நல்லுார் வார சந்தைக்கு, மினி ஆட்டோவில் பூச்செடிகளை விற்-பனைக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், ராமச்சந்திரனிடம் கழுத்தில் பச்சை குத்திக்கொள்கிறீர்-களா என, நைசாக பேசியுள்ளனர். ராமச்சந்திரன் சம்மதம் தெரி-வித்ததால், கழுத்தில் பச்சை குத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் அதே இடத்தில் மயங்கியுள்ளார். இரவு, 9:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, வியாபாரத்துக்கு கொண்டு வந்த பூச்செடிகளுடன் மினி ஆட்டோ காணாமல் போனது தெரியவந்-தது.இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகார்படி, நல்லுார் போலீசார், மினி ஆட்டோவையும், அதனை திருடிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப-டுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி