உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுற்றுலா பயணியர் வசதிக்கு 8 இடங்களில் பெயர் பலகை

சுற்றுலா பயணியர் வசதிக்கு 8 இடங்களில் பெயர் பலகை

சேந்தமங்கலம் : கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணியர் வசதிக்கு, எட்டு இடங்களில் வழித்தடம் குறித்த பெயர் பலகை வைக்கப்பட்டுள்-ளது.கொல்லிமலைக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். புதிதாக வரும் சுற்றுலா பயணியர், கொல்லிமலையில் சுற்றி பார்க்க வேண்டிய இடம், ஆன்மிக தலம், அருவிகள் எங்கு உள்ளது, எவ்வளவு துாரம் என்பது குறித்து, மலைக்கு வரும் சுற்றுலா பய-ணியர் தெரிந்து கொள்ளும் வகையில், எட்டு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பெரிய அளவிலான பெயர் பல-கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், புதியதாக மலைக்கு வரும் சுற்றுலா பயணியர், அருவிகளுக்கு செல்லும் வழியை எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ