உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டெங்கு, தொற்றுநோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

டெங்கு, தொற்றுநோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

நாமக்கல் : ''பருவமழை காலத்தில், டெங்கு மற்றும் தொற்று நோய் பர-வாமல் தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தகில், டெங்கு, தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பர-வாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்-றன. அதிகாரிகள் தேவையான மருந்துகளின் இருப்பை உறுதிப்ப-டுத்தி கொள்ள வேண்டும். நீர் தேங்கக்கூடிய இடங்களில் துாய்-மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, 3 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நிலவேம்பு கஷாயம் வழங்க நடவடிக்கை மேற்-கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தியாகும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வீடு-களை சுற்றியுள்ள பகுதிகளில், மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகியவற்றை அகற்றி, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்-மொழி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதா-ரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை