உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

நாமக்கல், : குமாரபாளையம், வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலை பள்-ளியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் சிந்-தனை பேரவை சார்பில், தமிழ் கூடல் இலக்கிய விழா, தந்தையர் தின சிறப்பு பரிசளிப்பு விழா மற்றும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு விருது வழங்கும் விழா என, முப்பெரும் விழா நடந்தது. தலைமையாசிரியர் செல்வி தலைமை வகித்தார். தமிழா-சிரியர் குமார் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் நாச்சிமுத்து, சமூக ஆர்வலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் சிந்-தனை பேரைவ தலைவர் ரமேஷ்குமார், 'தந்தையைப் போற்-றுவோம்' என்ற தலைப்பில் பேசினார்.விழாவில், தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தாருணி-காவுக்கு, 'தமிழ்ச்சுடர்' விருது, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்-பட்டது. தொடர்ந்து, பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பிரசன்னா, இளவரசன், திருநாவுக்கரசு ஆகி-யோருக்கும், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாண-வியருக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ