நினைவேந்தல் நிகழ்ச்சி
நினைவேந்தல் நிகழ்ச்சிநாமக்கல்:கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் செழியனின், 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகே நடந்தது.தெற்கு மாவட்ட கொ.ம.தே.க., செயலாளரும், எம்.பி.,யுமான மாதேஸ்வரன், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தொடர்ந்து, செழியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் பழனிமலை, தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர், செழியன் உருவ படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.