உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழாசேந்தமங்கலம்:சேந்தமங்கலம், அப்துல்கலாம் நற்பணி மன்றம் சார்பில், உலக தண்ணீர் தினத்தையொட்டி, சேந்தமங்கலம் ஏரிக்கரையில் பள்ளி மாணவ மாணவியர் மரக்கன்றுகள் நடும் விழா சார்பில் நடந்தது.அப்துல்கலாம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை வகித்தார். 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், உலக வெப்பமயமாவதை தடுக்கும் வகையிலும், எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் வகையிலும் வேம்பு, புளி, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.நண்பர்கள் குழு நிர்வாகிகள் வெங்கடேஷ், ராஜா, சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ