உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கவுன்சிலரை தாக்கியவர் கைது

கவுன்சிலரை தாக்கியவர் கைது

கவுன்சிலரை தாக்கியவர் கைதுதிருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சி, 9வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ரமேஷ், 50; இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, தொண்டிக்கரடு முனியப்பன் கோவில் அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இருவர், சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, தாக்கியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை முன் நின்று கொண்டிருந்த விசைத்தறி தொழிலாளி சூரியம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை