உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய திருநங்கைகள்தினம் கொண்டாட்டம்

தேசிய திருநங்கைகள்தினம் கொண்டாட்டம்

தேசிய திருநங்கைகள்தினம் கொண்டாட்டம்நாமக்கல்:இதயம் திருநங்கைகள் முன்னேற்ற சங்கம் சார்பில், ஏப்., 15ல் தேசிய திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று நாமக்கல்லில் பல்வேறு பகுதிகளில் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் திருநங்கைகள் கொண்டாடினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் சிம்ரன் தலைமை வகித்தார். திருநங்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசும் மற்றும் குடிநீர் பாட்டில் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். இதில், சங்க செயலாளர் அருணா, பொருளாளர் ஆர்த்தி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மனீஷா, காருண்யா உள்ளிட்ட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை