உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மஞ்சள் ஏலம் ரத்து

மஞ்சள் ஏலம் ரத்து

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. மூன்று வாரங்களுக்கு பின், கடந்த வாரம், மஞ்சள் ஏலம் நடந்தது. நேற்றும், வரத்து குறைவாக இருந்ததால், மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.இதுகுறித்து, மஞ்சள் விவசாயிகள் கூறுகையில், 'மஞ்சள் அறுவடை முடிந்துவிட்டது. அதை வேகவைத்து, சலித்துக்கொண்டு வந்து விற்று வந்தோம். தற்போது, இருப்பில் உள்ள மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. ஜனவரி மாதத்தில் புது மஞ்சள் அறுவடை தொடங்கி விடும் எனவே இனிமேல் இரண்டு வாரம் அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறைதான் மஞ்சள் ஏலம் நடக்கும்' என்றனர். ஆர்.சி.எம்.எஸ்.,சுக்கு மஞ்சள் வரத்து குறைவாக இருந்ததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தனியார் மண்டிகளில் ஏலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ