மது விற்றவர் கைது190 பாட்டில் பறிமுதல்
மது விற்றவர் கைது190 பாட்டில் பறிமுதல்காரிப்பட்டி :காரிப்பட்டி, நேரு நகரில், நேற்று காலை, மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் மது பாட்டில்களை வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்த, அப்பகுதியை சேர்ந்த செல்வம், 46, என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம், 190 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.