ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில்21ல் மக்களுடன் முதல்வர் முகாம்
ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில்21ல் 'மக்களுடன் முதல்வர்' முகாம்ராசிபுரம்:நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில், வரும், 21 முதல், மார்ச், 13 வரை, மூன்று கட்டமாக, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது. ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், வரும், 21ல் முகாம் நடக்கிறது. ராசிபுரம் யூனியன், முத்துக்காளிப்பட்டி பஞ்., ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், நாமகிரிப்பேட்டை யூனியன், மங்களபுரம் பாலு மலர் மண்டபம் மற்றும் கார்கூடல்பட்டியில், பிலிப்பாக்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், இந்த முகாம் நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை முகாமில் வழங்கி பயன்பெறலாம். முகாம், காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை நடக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.