| ADDED : ஜூலை 22, 2024 08:16 AM
வாஷிங்டன் ; அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவ-தாக, அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் வரும் நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்-டியிடுகிறார். ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, போட்டியி-டுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. எனினும் வயது மூப்பால், பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் அவர் அவதிப்படுகிறார். சமீபத்தில் அட்லாண்-டாவில் நடந்த விவாத நிகழ்ச்சியில், டிரம்ப் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிபர் பைடன் திணறினார். இது ஜனநாயகக் கட்சி மூத்த தலைவர்கள் இடையே அதிருப்-தியை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிபர் வேட்பாளரில் இருந்து ஜோ பைடனை மாற்ற வேண்டும் என, அவரது சொந்த கட்சியினரே குரல் கொடுக்கத் துவங்கினர்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக, அதிபர் பைடன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவ-ளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.-