உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

ராசிபுரம் : ராசிபுரத்தில், தேசிய மாதர் சம்மேளனம் மற்றும் அனைத்திந்-திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்; கள்-ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் மீதும், விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழகம் முழுதும் போதைப்பொருள், கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; கள்-ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு குளறுபடி இன்றி நிவாரணம் வழங்க வேண்டும். 'நீட்' தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்தும், 'நீட்' தேர்வை ரத்து செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் மீனா, இளைஞர் பெருமன்ற ராசிபுரம் தாலுகா தலைவர் வேம்பு ஆகியோர் தலைமை வகித்தனர். சி.பி.ஐ., நகர செயலாளர் மணி-மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ