ரூ.8 லட்சம் காசோலை மோசடி வழக்கு பங்குச்சந்தை தரகருக்கு ஓராண்டு சிறை
ரூ.8 லட்சம் காசோலை மோசடி வழக்குபங்குச்சந்தை தரகருக்கு ஓராண்டு சிறைமேட்டூர், ஆக. 30-எட்டு லட்சம் ரூபாய் காசோலை மோசடி வழக்கில், பங்குச்சந்தை தரகருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சேலம் மாவட்டம் மேட்டூர், மாதையன்குட்டையை சேர்ந்தவர் அருளழகன், 42. அருகே உள்ள சதுரங்காடியில், 'அம்மாள் டிரேடர்ஸ்' பெயரில் பங்குச்சந்தை தொழில் நடத்துகிறார். தொழிலை விரிவுபடுத்த, 2022 செப்., 5ல், பொன்னகரை சேர்ந்த, பந்தல் ஒப்பந்ததாரர் ஜெயகுமாரிடம், 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதற்கு ஈடாக காசோலை கொடுத்தார். பின் அருளழகன் பணம் தராததால், காசோலையை ஜெயகுமார் வங்கியில் செலுத்தியுள்ளார். அது பணமின்றி திரும்பியது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயகுமார், மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பத்மபிரியா விசாரித்து, அருளழகனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், 8 லட்சம் ரூபாயை ஒரு மாதத்தில் ஜெயகுமாருக்கு வழங்க வேண்டும். மறுத்தால் மேலும், 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.