உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் சென்றபோது வலிப்பு பார்சல் நிறுவன ஊழியர் பலி

டூவீலரில் சென்றபோது வலிப்பு பார்சல் நிறுவன ஊழியர் பலி

மல்லசமுத்திரம்: சேலம் மாவட்டம், நெத்தி மேடு, இட்டேரி ரோட்டை சேர்ந்த முத்தமிழ் மகன் கோகுல்நாத், 27. இவர், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு வழக்கம்போல வீட்டில் இருந்து டூவீலரில் பணிக்கு சென்றார். அப்போது, மல்லசமுத்திரம், கள்ளுக்கடை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்-தவர்கள் அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரி-ழந்தார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோகுல்நாத்திற்கு, சன்மதி, 24, என்ற மனைவியும், 4 வயதில் சாய்ஸ்ரீ, 2 மாத மாதத்தில் மகாலஷ்மி என்ற இரண்டு குழந்-தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை