நாமக்கல், : 'ஒன்றிய அளவில் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வு நடத்த, திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிட வலியுறுத்தி' டிட்டோஜாக் அமைப்பினர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவ-டிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டம், நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பஞ்., நடு-நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் பழனி-யப்பன், சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்-டக்குழு உறுப்பினர் முருக செல்வராசன் துவக்கி வைத்தார். போராட்டத்தில், தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும், 90 சதவீதம் ஆசிரியர்களை பெரிதும் பாதிக்கும், மாநில பணிமூப்பு திணிக்கும், ஒன்றிய, நகராட்சி பணிமூப்பு மறுக்கும் அரசா-ணையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக்கல்வி ஆசிரியர்-களின் பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள், பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு, ஒன்றிய அளவில் மட்டும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தும் வகையில், திருத்திய கலந்-தாய்வு கால அட்டவணை வெளியிட வேண்டும்.தமிழக அரசின் இடமாறுதல் கொள்கையின் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிடும் அளவிற்கு, மேலிட பரிந்துரைகள் என்ற பெயரில், வரைமுறையற்ற வகையில் பிறப்பிக்கப்படும் லஞ்ச-, லாவண்ய மற்றும் ஊழல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், முறைகேடாக மாநிலம் முழுதும் வழங்கப்பட்டுள்ள விதிமீறிய இடமாறுதல்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து, கலந்தாய்வு நடக்கும் மையம் முன், தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.'ஆசிரியர்களை அனுமதித்தால் தகராறு செய்வோம்'தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன், கலந்தாய்வு நடத்திய மாவட்ட தொட்டக்க-கல்வி அலுவலர் பாலசுப்ரமணியத்திடம் சென்று, 'பணியிடம் கேட்டு கலந்தாய்விற்கு வரும் ஆசிரியர்களை அனுமதிக்க கூடாது. அப்படி அனும-தித்தால் நாங்கள் உள்ளே வந்து தகராறில் ஈடுபடுவோம். எங்களு-டைய உறுப்பினர்கள் ஏதாவது செய்தாலும் செய்து விடுவார்கள்' என, மிரட்டும் வகையில் பேசினார். அவரது பேச்சால் அரசு அலு-வலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.