மேலும் செய்திகள்
பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
16-Aug-2025
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்துள்ள குப்பநாயக்கனுார், பொன்னம்மா புதுாரில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக, கடந்த வாரம் கும்பாபிஷேக விழாவிற்காக முகூர்த்த கால் நடப்பட்டது.நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு காந்திபுரத்தில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் சிலம்பாட்ட மாணவர்கள், சிலம்பம் சுற்றிக்கொண்டு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, யாகசாலை அமைத்து யாக வேள்வி பூஜை நடந்தது. குப்பநாயக்கனுார் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
16-Aug-2025