உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு மகளிர் கல்லுாரியில் 16வது பட்டமளிப்பு விழா

அரசு மகளிர் கல்லுாரியில் 16வது பட்டமளிப்பு விழா

அரசு மகளிர் கல்லுாரியில்16வது பட்டமளிப்பு விழாநாமக்கல், ஆக. 25-நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 16வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பானுமதி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவர் பேசுகையில், ''பட்டங்களைப் பெற்ற மாணவியர், எதிர்காலத்தில் சிறப்பாக சமுதாயத்திற்கு பாடுபட வேண்டும். கல்விதான் ஒருவரை வாழ்க்கையில் உயர்த்தும்,'' என்றார்.தொடர்ந்து, 2,041 மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கினார். அதில், முதுகலை பொருளியல் துறை மாணவியர், 2 பேர், நுண்ணுயிரியல் துறை மாணவி ஒருவர் என, மூன்று பேர், பெரியார் பல்கலை அளவில் தங்கப்பதக்கம் பெற்றனர்.மேலும், தரவரிசை பட்டியலில், இளநிலை பொருளியல் துறையில், 20 பேர், விலங்கியல் மற்றும் நுண்ணுயிரியல் துறையில், தலா ஒன்று என, மொத்தம், 22 பேர் இடம் பிடித்தனர். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி