புதன்சந்தை மாட்டுச்சந்தையில்ரூ.2 கோடிக்கு விற்ற மாடுகள்
புதன்சந்தை மாட்டுச்சந்தையில்ரூ.2 கோடிக்கு விற்ற மாடுகள்புதுச்சத்திரம், :புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தை பகுதியில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, வேலகவுண்டம்பட்டி, நாமக்கல், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை முடிந்ததையடுத்து, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது. கடந்த வாரம், மூன்று கோடிக்கு விற்பனையான நிலையில், நேற்று, இரண்டு கோடிக்கு மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.