உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓட்டு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு 310 சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு

ஓட்டு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு 310 சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு

நாமக்கல்:ஓட்டு எண்ணும் மையத்தில், துப்பாக்கி ஏந்திய நிலையில், ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 310, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.நாமக்கல் லோக்சபா தொகுதியில், சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில், 7,08,317 ஆண் வாக்காளர்கள், 7,44,087 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள், 158 என, மொத்தம், 14 லட்சத்து, 52,562 பேர் உள்ளனர். லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று முன்தினம் நடந்தது. அதில், 5,53,668 ஆண்கள், 5,81,525 பெண்கள், 53 இதரர் என, மொத்தம், 11 லட்சத்து, 36,246 பேர் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். இது, 78.16 சதவீதம்.லோக்சபா தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் ஆகியவை, ஓட்டு எண்ணும் மையமான விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லுாரிக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்புடன் தனி அறையில் சட்டசபை தொகுதி வாரியாக வைக்கப்பட்டு பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.இங்கு, ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய காவல் படை, தமிழக சிறப்பு காவல் படை, நாமக்கல் ஆயுதப்படை போலீசார், நாமக்கல் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், மூன்று சிப்ட் முறையில், துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், ஓட்டு எண்ணும் மையத்தில், 310 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, எல்.இ.டி., 'டிவி' மூலம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அதேபோல், ஒரு சிப்டுக்கு, ஒரு தாசில்தார் மற்றும் துணை ராணுவத்தினர், போலீசார் என, மொத்தம், 83 பேர், சுழற்சி முறையில், 249 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை