உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 9ல் சேலம் மாநகராட்சியில் மண்டல வாரியாக மா.திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு

9ல் சேலம் மாநகராட்சியில் மண்டல வாரியாக மா.திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு

9ல் சேலம் மாநகராட்சியில் மண்டல வாரியாகமா.திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்ப்புநாமக்கல், நவ. 7-'வரும், 9ல் சேலம் மாநகராட்சியில், மண்டல அளவில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு, மண்டல அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம், வரும், 9ல் சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில், காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.மண்டல வாரியாக நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளின் கல்வித்தகுதி இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், இளங்கலை, முதுகலை -தமிழ் இலக்கியம், இளங்கலை, முதுகலை ஆங்கில இலக்கியம், கணினி கல்வி உள்ளிட்ட பட்டப்படிப்புகள், 8, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பார்வையற்றவர்கள் புத்தகம் கட்டுனர் பயிற்சி, நாற்காலி சீரமைப்பு, தொலைபேசி இயக்குதல் போன்ற ஏதாவது சிறப்பு பயிற்சிகள் முடித்திருந்தால், உரிய சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச்சான்று ஆகியவற்றின் நகல்கள், மார்பளவு புகைப்படம், பணி அனுபவச்சான்று மற்றும் தன் விபர குறிப்பு ஆகியவற்றுடன் முகாம் நடக்கும் நாளில் நேரில் பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 04286--280019 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ