உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிலக்கடலையில் ஊட்டச்சத்து கலவை தெளிக்க அறிவுரை

நிலக்கடலையில் ஊட்டச்சத்து கலவை தெளிக்க அறிவுரை

நாமகிரிப்பேட்டை: நிலக்கடலையில், பெரிய பருப்புகள் கொண்ட ரகங்களில், காய்களின் வளர்ச்சி குறைபாடு என்பது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. இதை தவிர்த்து நல்ல வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு பல ஊட்டச்சத்துக்களை கலந்து தெளிக்க வேண்டும் என்று வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்து கலவையை தயாரிக்க, டி.ஏ.பி., 2.5 கிலோ அமோனியம் சல்பேட், ஒரு கிலோ மற்றும் போராக்ஸ் என்ற வெண்சுரம், 0.5 கிலோவை, 37 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து, ஒரு இரவு முழுதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலை, இந்த கலவையை வடிகட்டினால், 32 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதனை, 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, 500 லிட்டர் அளவில் தயார் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பிளானோபிக்ஸ் மருந்து, 350 மில்லியை இதில் சேர்த்து விதைத்த, 25ம் நாள் மற்றும் 35ம் நாட்களில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் நல்ல திரண்ட பருப்புகள் கிடைக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை