உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ்சில் பணம் பறிக்க முயற்சி மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

பஸ்சில் பணம் பறிக்க முயற்சி மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

எருமப்பட்டி: ராசிபுரம் அருகே, க.கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 52; அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த, 2 இரவு, 12:00 மணியளவில், நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்வதற்காக, எருமப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பயணிகளிடம் பணம் பறிக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த பயணிகள் சத்தமிட்டுள்ளனர். டிரைவர் ஆனந்தன், பஸ்சை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நபர்கள், 'பஸ்சை ‍எடுத்தால், பஸ்சுடன் வைத்து கொளுத்தி விடுவதாக' மிரட்டல் விடுத்துள்ளனர். பின், பஸ்சில் இருந்து இறங்கி பின் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினர். இதுகுறித்து, டிரைவர் ஆனந்தன், எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். போலீசார், 'சிசிடிவி' பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை