உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆவத்திபாளையம் பகுதியில் புற்றுநோய் பரிசோதனை முகாம்

ஆவத்திபாளையம் பகுதியில் புற்றுநோய் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதியில், பள்ளிப்பாளையம் மனித நேயம், உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில், இலவச பொது மற்றும் புற்றுநோய் மருத்துவ முகாம், நேற்று நடந்தது.ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனை டாக்டர்கள், பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கினர். இந்த மருத்துவ முகாமில், புற்றுநோய்க்கான அறிகுறி உள்ளது என கண்டறியப்பட்டவர்கள், மேல் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.முகாமில், ஆவத்திபாளையம், சமயசங்கிலி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை