உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி வெள்ளம்: 7 வீடுகள் சேதம்

காவிரி வெள்ளம்: 7 வீடுகள் சேதம்

குமாரபாளையம்: குகுமாரபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட, தண்ணீர் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.குமாரபாளையம் காவேரி கரையோர பகுதிகளான பொன்னி-யம்மாள் சந்து, கலைமகள் வீதி, இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர், மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில், 143 குடும்பங்-களைச் சேர்ந்த, 572 பேர், நான்கு முகாம்களில் தங்க வைக்கப்-பட்டனர்.வெள்ளம் படிப்படியாக காவிரியில் குறைந்ததையடுத்து, முகாம்களை விட்டு மீண்டும் தங்களது குடியிருப்புகளுக்கு சென்-றனர். வெள்ளம்பாதித்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை அதி-காரிகள் ஆய்வு செய்தனர்.கலைமகள் வீதி, பொன்னியம்மாள் சந்து உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்பால் 7 வீடுகள் சேதமடைந்திருந்தன. ஏழு வீடுகளை சேர்ந்தவர்கள் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ