| ADDED : மே 10, 2024 02:28 AM
வெண்ணந்தூர்;வெண்ணந்துாரில் நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது.நகர தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் காசி பெருமாள், தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகர செயலாளர் செல்லியம்மன் மணி வரவேற்றார். கூட்டத்தில், தினமும் அரசு பஸ் ராசிபுரத்தில் இருந்து அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டு வெண்ணந்துார், ஆட்டையாம்பட்டி, காக்காபாளையம் வழியாக கோவை நகருக்கு சென்று அங்கிருந்து மாலை, 6:00 மணிக்கு புறப்பட்டு ராசிபுரம் நகருக்கு வர போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெண்ணந்துார் யூனியனில் உள்ள 24 பஞ்.,களில் குடியிருக்கும் மக்களுக்கு கடந்த, 40 ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நிலையில், தேசத்தலைவர்களின் சிலைகள் மூடியபடி கிடக்கிறது. எனவே, அவற்றை மக்கள் காணும் வகையில் திறந்து வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலன் கருதி தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறைக்கு, ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்துார், ஆட்டையாம்பட்டி, காக்காபாளையம் வழியாக தனியாக அரசு பஸ் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.