உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் இன்று, நாளை குடிநீர் வினியோகம் ரத்து

ராசிபுரத்தில் இன்று, நாளை குடிநீர் வினியோகம் ரத்து

ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், இடைப்பாடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், ராசிபுரம் நகருக்கு காவிரி நீர் வினியோகித்து வருகிறது. இந்நிலையில், இடைப்பாடி அருகே, பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், இன்று, நாளை குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி