பரமத்தி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடிமகன்கள் கும்மாளம்
ப.வேலுார்: பரமத்தி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்-களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்க, அப்பகுதியை சேர்ந்த சிலர், விளையாட்டு மைதானம் அமைக்க, 2.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர். இங்கு, 6 முதல், 12ம் வகுப்பு வரை, 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். விளையாட்டு மைதானத்தை சுற்றி சுற்றுச்சுவர் கிடையாது. இதனால், விளையாட்டு மைதா-னத்தில், நள்ளிரவு, 12:00 மணி வரை, 'குடி'மகன்கள் மது குடித்-துவிட்டு கும்மாளமிடுகின்றனர். தினந்தோறும் காலை நேரத்தில், மைதானத்தில் உடைந்து கிடக்கும் மது பாட்டில்களை சாக்கு பையில் அள்ளிச்செல்லும் நிலை உள்ளது. இதனால், மாண-வர்கள் விளையாட்டு பயிற்சிக்கும், பொதுமக்கள் நடைபயிற்-சிக்கும் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்-ளது. நள்ளிரவில் ரோந்து செல்லும் பரமத்தி போலீசார், விளை-யாட்டு மைதானத்தையும் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, தலைமைஆசிரியர் நீதிராஜன் கூறுகையில், ''பள்ளி விளையாட்டு மைதானத்தில் மதுபாட்டில்கள் கிடப்பது குறித்து, பரமத்தி போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளோம். மீண்டும் புகாரளிக்கப்படும். கூடிய விரைவில் அதிகாரிகள் அனு-மதியுடன் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.