உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஜமாபந்தியில் விவசாயிகள் மனு

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஜமாபந்தியில் விவசாயிகள் மனு

ராசிபுரம், ராசிபுரத்தில், நேற்று வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது. இதில், அப்பகுதி விவசாயிகள் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: வெண்ணந்துார், தொட்டியப்பட்டியில் சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரி நிலத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். குறிப்பாக, ஏரிக்கு செல்ல கூடிய மழைநீர் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் ஏரிக்கு செல்லும் நீர் தடைபட்டுள்ளது. மேலும், ஏரிக்கு செல்ல வேண்டிய மழைநீர், ஏரிக்கு செல்ல முடியாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும், ஊர் பகுதியில் இருந்து ஏரிக்கரைக்கு செல்லும் பாதையை தனி நபர்கள், மரங்களை வெட்டி நடுவே போட்டு மறைத்து வைத்துள்ளனர். இதனால் ஏரிக்கரைக்கு செல்லும் பாதையை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்