உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 21ல் இலவச கண் சிகிச்சை முகாம்

21ல் இலவச கண் சிகிச்சை முகாம்

ப.வேலுார், நாமக்கல், ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில், வரும், 21ல் இல-வச கண் சிகிச்சை முகாம், ப.வேலுார் பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் நடக்கிறது. முகாமில், கண் சம்பந்தப்-பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்-கப்படுகிறது. மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடலில் உள்ள ரத்தக்கொ-திப்பு அளவு, கண்ணில் பிரஷரின் அளவு ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, சேலம் அரவிந்த் கண் மருத்துவம-னைக்கு, அரிமா சங்க சார்பில் அழைத்து சென்று இலவசமாக கண் அறுவை சிகிச்சை நடக்கிறது.பஸ் வசதி, மருந்துகள், கண் கண்ணாடி, உணவு வசதி அனைத்து ஏற்பாடுகளையும் ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில் இலவசமாக நடக்கிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். பரமத்தி வேலுார் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை