உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 3 ஆண்டில் 16,800 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

3 ஆண்டில் 16,800 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

திருச்செங்கோடு, ஆக. 29-திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்து, 703 பயனாளிகளுக்கு, 5 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், வருவாய்த்துறை மூலம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள, 560 பேருக்கு, அடுத்த ஆண்டு, 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், வீடுகட்ட ஆணை வழங்கப்படும். நம் மாவட்டத்தில் மட்டும், 2021 முதல் மூன்று ஆண்டுகளில், 16,800 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, அரசின் பல்வேறு துறை சார்பில், 703 பயனாளிகளுக்கு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, ஆர்.டி.ஓ., சுகந்தி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், சுகாதாரபணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ