உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிருபரை கட்டிப்போட்டு கொள்ளையடித்த கும்பல்

நிருபரை கட்டிப்போட்டு கொள்ளையடித்த கும்பல்

பள்ளிப்பாளையம்,:நிருபரை கட்டிப்போட்ட முகமூடி அணிந்த வடமாநில கும்பல், நகை, பணத்தை கொள்ளையடித்தது.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஸ்ரீகார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 50; மனைவி, மகன், மகளுடன் வசிக்கிறார். இவர் பிரபல தமிழ் நாளிதழின் பகுதி நேர நிருபராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம், ரமேஷ் குடும்பத்தார் வெளியூர் சென்றனர். பணி முடிந்து இரவு, 10:30 மணிக்கு, ரமேஷ் வீட்டிற்கு வந்த போது, வீட்டிற்குள் இருந்த வடமாநில கும்பல் ரமேஷின் கைகளை கட்டி, அவர் அணிந்திருந்த மோதிரம், பீரோவில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் என மொத்தம், 7.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ளவற்றை கொள்ளையடித்து, வீட்டிற்குள் மிளகாய் பொடி துாவி தப்பினர்.நேற்று காலை, பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ரமேஷ் புகாரளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை