உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சட்டவிரோத மது விற்பனை;பார் ஓனர்களுக்கு எச்சரிக்கை

சட்டவிரோத மது விற்பனை;பார் ஓனர்களுக்கு எச்சரிக்கை

பள்ளிப்பாளையம்;பள்ளிப்பாளையம், வெப்படை, மொளசி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் பார், தாபா ஓட்டல் உரிமையாளர்களுக்கு, புதிதாக திருத்தியமைக்கப்பட்ட மதுவிலக்கு சட்டம் குறித்து விதிமுறைகள், விபரங்கள் குறித்து தெரிவிக்கும் கூட்டம், நேற்று முன்தினம் இரவு, வெப்படை போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''அரசு அறிவித்த நேரங்களில் மட்டும், 'பார்' செயல்பட வேண்டும். தாபா ஓட்டலில் மது பாட்டில் விற்பனை செய்யக்கூடாது. சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்வது, போலி, கலப்படம் மது பானம் தயாரிப்பு, சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வது தெரியவந்தால், புதிதாக திருத்தியமைக்கப்பட்ட மதுவிலக்கு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதில் பார், தாபா ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை