உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கலைக்கல்லூரியில் பயோடேட்டா மன்றம் திறப்பு

அரசு கலைக்கல்லூரியில் பயோடேட்டா மன்றம் திறப்பு

ராசிபுரம்: ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லுாரியில், தாவர-வியல் மற்றும் விலங்குகள் துறையின் சார்பாக, பயோடேட்டா மன்ற திறப்பு விழா நடந்தது.தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைத்தலைவர் செங்குட்-டுவேல் வரவேற்றார் முதலாம் ஆண்டு தாவரவியல் விலங்கியல் மாணவ, மாணவிகளை, சீனியர் மாணவ, மாணவிகள் ரோஜா மலர் கொடுத்து வரவேற்றனர். விழாவில் பயோட்டா மன்ற லோகோவை, கல்லுாரி முதல்வர் பானுமதி வெளியிட்டு தலைமை உரையாற்றினார். நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி தாவரவியல் துறை இணை பேராசிரியர் வெஸ்லி, அறிவியலில் வேலை வாய்ப்பு, வழிகாட்டல் என்ற தலைப்பில் பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் குரு பிரகாஷ், செயலாளர் உஷா தேவி, துணை செய-லாளர் அருண் மற்றும் பொருளாளராக தனசேகரன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இரண்டாம், மூன்றாம் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி லாவண்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ