மோகனுார் : மோகனுார் பகுதியில், வீட்டின் சுவர்களில் மர்ம குறியீடு போடப்பட்டுள்ளதால், கொள்ளை சம்-பவம் அரங்கேற்றவா என, பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரங்களில் சுற்-றித்திரியும் மர்ம நபர்கள், ஆட்கள் நடமாட்டம் இருப்பது, இல்லாததை நோட்டம் விடுகின்றனர். தொடர்ந்து, இரவு நேரங்களில் அந்த வீடுகளில் தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர். மேலும், குறிப்பிட்ட வீடுகளில் ஆட்கள் இருக்கின்றனர், இல்லாமல் இருக்கின்றனர் என்பதை அறியும் வகையில், அந்த வீடுகளில், சக திருடர்களுக்கு புரியும் வகையில், சில குறியீடுகளை கிறுக்கி செல்கின்றனர். அவற்றை தெரிந்து கொள்ளும் மர்ம நபர்கள், அந்த வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி வருகின்றனர்.அதன்படி, மோகனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட முருகன் கோவில், ஈ.பி.காலனி, ராசிகுமாரிபாளையம் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில், மர்ம நபர்கள், மர்ம எழுத்துக்கள் குறியீடு போட்-டுள்ளனர். குறிப்பாக, வசதி மிக்க வளமான நபர்-களின் வீடுகளை பார்த்து, வீடுகளின் முன் பகுதியில் மர்ம குறியீடுகள் போட்டுள்ளனர். வேற்று மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.இதைப் பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள், மோகனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்-தனர். அதையடுத்து, போலீசார் தனித்தனி குழுக்-களாக சென்று, மர்ம குறியீடுகளை அழித்து வரு-கின்றனர். தொடர்ந்து, போலீசாரும், பொதுமக்-களும், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.