உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவருக்கு ரூ.1 லட்சத்துடன் டேப்லெட் வழங்க உத்தரவு

மாணவருக்கு ரூ.1 லட்சத்துடன் டேப்லெட் வழங்க உத்தரவு

நாமக்கல்:நாமக்கல், கோட்டை சாலையை சேர்ந்த மனோகரன் மகன் ஜீவன்ராஜ், 24. இவர், குடிமை பணி தேர்வுக்கு படிக்கிறார். இதற்காக கையடக்க கணினி, 'அமேசான்' ஆன்லைன் வணிக தளத்தில், 2022 ஜூலையில், 21,091 ரூபாய் செலுத்தி ஆர்டர் செய்தார்.அமேசான் நிறுவன விற்பனையாளரான திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த புதுவயல்துறையை சேர்ந்த, 'அபாரியோ ரீடெய்ல்' நிறுவனம், மாணவருக்கு கையடக்க கணினியை அனுப்பியது. அவற்றை பயன்படுத்திய போது, 'டச் ஸ்கிரீன்' வேலை செய்யவில்லை. கையடக்க கணினியின் உற்பத்தி நிறுவன சேவை மையத்தில் பழுதை நீக்க, மூன்று முறை கொடுத்தும் பழுது நீக்கி தரவில்லை. இதுகுறித்து, பொருளை உற்பத்தி செய்தவருக்கும், விற்பனை செய்தவருக்கும் இணையத்தில் தெரிவித்தும் பிரச்னையை சரி செய்யவில்லை. மனமுடைந்த ஜீவன்ராஜ், 2023 ஜூலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார்.விசாரித்த நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.அதில், கையடக்க கணினியின் உற்பத்தியாளரும், விற்பனையாளரும் குறைபாடான பொருளை விற்றதுடன், சேவை குறைபாடும்புரிந்துள்ளனர். அதனால், 2019ல் நடைமுறைக்கு வந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, இளைஞருக்கு நான்கு வார காலத்துக்குள் புதிதாக கையடக்க கணினி வழங்க வேண்டும் அல்லது அவர் செலுத்திய தொகை, 21,091 ரூபாயை வழங்க வேண்டும்.வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக, 1 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை