உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோட்டில் ரிக் வாகன தொழில் நுட்ப கண்காட்சி

தி.கோட்டில் ரிக் வாகன தொழில் நுட்ப கண்காட்சி

திருச்செங்கோடு;திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கம், திருச்செங்கோடு இன்ஜினியரிங் சர்வீஸ் சென்டர் சங்கம் சார்பில், 4-ம் ஆண்டு ரிக் வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, ஆனங்கூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று தொடங்கியது. ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், ரிக் இன்ஜினியரிங் - சர்வீஸ் சென்டர் சங்க தலைவர் பரந்தாமன் ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து, 100-க்கும் மேற்பட்ட, ரிக் வாகனங்கள் மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர். அதில், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை, நாமக்கல், சேலம், ஈரோடு, கோயமுத்துார், கரூர், மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ரிக் வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். நாளை, நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ