உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவியர் விளையாட்டிலும் தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்

மாணவியர் விளையாட்டிலும் தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்

'மாணவியர் விளையாட்டிலும் தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்'நாமக்கல்:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், ஐம்பெரும் விழா நடக்கிறது. நேற்று முன்தினம், பட்டமளிப்பு விழா நடந்தது. தொடர்ந்து, நேற்று விளையாட்டு விழா நடந்தது.கலெக்டர் உமா, போட்டிகளை துவக்கி வைத்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 பஞ்சாயத்துகளுக்கும், தலா, 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறன் மேம்படும். மேலும், விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம், தற்போதைய இணைய உலகில், மொபைல் போன் பயன்பாடு மற்றும் மன அழுத்தம் காரணமாக இளைஞர்கள், உடல்நலன், மன நலன் பாதிப்படைவது குறைக்கப்படும்.மாணவியர், கல்வியோடு விளையாட்டிலும் தங்களது தனி திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவி துளசிமதி, பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று, நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவர்கள் வாழ்வில் தோல்விகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகளில், விளையாட்டு அனுபவம் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.முன்னதாக அணைத்து துறை மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, உடற்கல்வி இயக்குனர் கோபிகா, பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ