உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் தமிழக விவசாயிகள் பயன்பெறவில்லை

பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் தமிழக விவசாயிகள் பயன்பெறவில்லை

நாமக்கல்: ''தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும், பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் இதுவரை பயன்பெறவில்லை,'' என, மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறினார்.இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது:பிரதமரின், விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தின், 17வது தவணையின் கீழ், 9 கோடியே, 26 லட்சம் பயனாளிகளுக்கு, 20,000 கோடி ரூபாய் பண பரிமாற்றத்தை, ஒரே நேரத்தில் பிரதமர் மோடி விடுவித்துள்ளார். மேலும், 'இப்கோ' மூலம் வேளாண் தோழிகளுக்கான, 'நமோ ட்ரோன் திதி' சான்றிதழ்கள் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளன. மகளிரின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, பிரதமர் நாடு முழுதும் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளார்.தமிழகத்தை பொறுத்தவரை, பிரதமரின் விவசாய நிதி திட்டம் ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு, அவர்கள் தங்களுடைய பெயரை திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான அரசு அலுவலர்கள், விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்வதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். இதுவரை வருமான வரி செலுத்தாதவர்கள் திட்டத்தில் பயன்பெற முடியும். தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும், இந்த திட்டத்தில் இதுவரை பயன்பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன் பெற, அவர்களின் பெயர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ