| ADDED : ஜூலை 01, 2024 03:57 AM
நாமக்கல்: 'ஜவுளித்துறையை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தீரன் தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கொ.ம.தே.க.,வின் தீரன் தொழிற்சங்க பேரவை பொது உறுப்பினர் கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மநில துணைத்தலைவர் செல்வராஜ், சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.கூட்டத்தில், மத்திய அரசு, 44 தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்யாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும். பொருளாதார மந்த நிலையால், தமிழகத்தில் விசைத்தறி தொழில் கடுமையான நெருக்கடியில் உள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு ஜவுளித்துறையை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, முன்னாள் எம்.பி., சின்ராஜ், தீரன் தொழிற்சங்க பேரவை மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக கோமகன், பொருளாளராக மகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.