மேலும் செய்திகள்
சாராயம் விற்ற 2 பேர் கைது
28-Oct-2024
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, தெற்குபாளையத்தை சேர்ந்தவர் சங்கர், 36; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பாப்பம்பாளையம் பகுதியில் உள்ள கட்டடத்தில், மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று காலை, இறந்த சங்கரின் உறவினர்கள் இழப்பீடு வழங்க கோரி, அரசு மருத்துவமனைக்கு வந்த போலீசாரை முற்றுகையிட்டனர். அவர்களிடம், பள்ளிப்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.
28-Oct-2024