உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 500க்கு 498 மதிப்பெண் பெற்று பள்ளியில் மாணவன் முதலிடம்

500க்கு 498 மதிப்பெண் பெற்று பள்ளியில் மாணவன் முதலிடம்

நாமக்கல்: நாமக்கல் - மோகனுார் ரோட்டில், டிரினிடி அகாடமி மெட்ரிக் பள்ளி சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நாமக்கல் டிரினிடி அகடமி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர். மாணவன் மோகித், 500க்கு, 498 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். இதேபோல், மாணவன் ஷாய்ராம், 479 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி யோஷனா, 476 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.மேலும், கணக்கு பாடத்தில், 3 பேர், அறிவியல், 1, சமூக அறிவியல், 1 முறையே, 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, தலைவர் குழந்தைவேல், செயலர் சந்திரசேகரன், முதல்வர் சோமசுந்தரம், துணை முதல்வர் ரமேஷ் ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ