உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டேப் வழங்கும் விழாவை ஒத்தி வைக்கணும்

டேப் வழங்கும் விழாவை ஒத்தி வைக்கணும்

நாமக்கல்: 'நாளை நடக்கும், 'டேப்' வழங்கும் விழாவை ஒத்திவைத்து, வேறொரு வேலை நாளில் நடத்த வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி கலையரங்கத்தில், நாளை காலை, 9:00 மணிக்கு, ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கும் விழா நடக்கிறது. அதில், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளி முழுவேலை நாளாக செயல்படும் நிலையில், நாளை நாமக்கல்லில் நடக்கும் விழாவை ஒத்தி வைத்துவிட்டு, வேறொரு வேலை நாளில் நடத்த வேண்டும். இந்த விழா, நாளை நடக்கும் பட்சத்தில், அவற்றை ஈடுசெய்வதற்கு ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும்.மேலும், 'டேப்' வழங்கும் விழாவில், அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என்பதை முழுமையாக கைவிட வேண்டும். வட்டார கல்வி அலுவலர்களின் மூலம், பள்ளிக்கு நேரடியாக, 'டேப்' வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ