மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிஷா வாலிபர் சிக்கினார்
05-Oct-2025
நாமக்கல்;நாமக்கல்லில், 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கு மறு கற்றல் பயிற்சி முகாம் நடந்தது.தமிழகத்தில், 1,300க்கும் மேற்பட்ட அவசர கால 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில், 28 அவசர கால 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இரவு, பகல் என ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.மேலும் மருத்துவ உதவியாளர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கற்றல் பயிற்சி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், மண்டல மேலாளர் அரவுக்கரசு தலைமையில் இரண்டு நாள் முகாம் நேற்று துவங்கியது. மாவட்ட மேலாளர் சின்னதுரை முன்னிலையில் நடந்த சிறப்பு பயிற்சி முகாமில், சென்னை மனித வளத்துறை அலுவலர் ரஞ்சித் பயிற்சி அளித்தார். சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு மறு கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025