உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை

நாமக்கல்:நாமக்கல், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நேற்று வரலட்சுமி விரத பூஜை நடந்தது. ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி பூஜை நடைபெறும். அதன்படி, நேற்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், உலக நன்மைக்காகவும் வரலட்சுமி நோன்பு வழிபாட்டை மேற்கொண்டனர். நாமக்கல் கடைவீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் வரலட்சுமி விரத நிகழ்ச்சியை முன்னிட்டு, மஞ்சள் காப்பு அலங்காரத்தில், மகாலட்சுமி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.* அதேபோல், நாமக்கல் அடுத்த பொம்மக்குட்டைமேடு, எம்.ஜி.ஆர்., காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, வரலட்சுமி விரதம் மேற்கொண்ட, 50க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி