உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 10 ரூபாய் இயக்கம் ஆலோசனை

10 ரூபாய் இயக்கம் ஆலோசனை

கொல்லிமலை : பத்து ரூபாய் இயக்கத்தின், நாமக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம், நேற்று கொல்லிமலையில் நடந்தது. தமிழகம் முழுதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், 10 ரூபாய் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மாநில செயல்வீரர்கள் கூட்டம், 2 வாரங்களுக்கு முன் நடந்தது.இதில், மாநிலம் முழுதும் இருந்து, 250க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், நேற்று கொல்லிமலையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் விஸ்வராஜூ, துணை பொதுச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் பாலு, பாலசுப்ரமணி, கதிர்வேலு, பழனிசாமி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர்களை அதிகப்படுத்துவது, நிர்வாகிகளுக்கான பயிற்சி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை உரிமை குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ