உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இரு தரப்பு மோதல் 10 பேருக்கு காப்பு

இரு தரப்பு மோதல் 10 பேருக்கு காப்பு

சேந்தமங்கலம், நவ. 9-சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதேவியை சேர்ந்தவர் முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், 56. சில தினங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், இவரது வீட்டின் முன் டூவீலரில் அதிவேகமாக சென்றுள்ளனர். இதை, ராஜேந்திரன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, வாலிபர்களுக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும், சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தனர். இதில், முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்பட, 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை